வடமாகாண நூலாசிரியர்களுக்கான நூற்பரிசுத் தேர்வு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
வடக்கு மாகாணத்தில் உள்ள நூலாசிரியர்களிடமிருந்து சிறந்த நூற்பரிசுத் தேர்வு 2024 க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் இந்த நூற்பரிசு தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2023 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 31 ஆம் திகதி வரையான காலத்தில் அச்சில் வெளிவந்திருக்கக்கூடிய 100 பக்கங்களிலும் கூடிய பக்கங்களைக் கொண்ட நூல்கள் போட்டிக்கு தகுதியானவையாக அந்தக் கோரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர் இலக்கியங்களுக்கு பக்கங்களின் எண்ணிக்கை தொடர்பில் கட்டுப்பாடில்லை.
நூல் வகைகள்
கவிதை, சிறுகதை,நாவல், விமர்சனம்,ஆன்மீகம்,மொழிபெயர்ப்பு, ஆய்வுகள், அறிவியல்,வரலாறு மற்றும் தொல்லியல், சமூகவியல்,சிறுவர் இலக்கியம்,தத்துவம், சூழலியல், தமிழ் வளர்ச்சி நூல்கள் ஆகிய துறைகளைச் சார்ந்த நூல்களை போட்டிக்காக நூலாசிரியர் அனுப்பி வைக்க முடியும்.
எதிர்வரும் 31.03.2024 ஆம் திகதிக்கு முன்னர் பண்பாட்டலுவல்கள் அலகிற்கு கிடைக்கக் கூடியவாறு பிரதேச கலாச்சார உத்தியோகத்தரினூடாக அனுப்பி வைக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு பிரதேச கலாச்சார உத்தியோகத்தரை தொடர்பு கொள்ள முடியும். அல்லது 021 205 41 05/ 021 320 25 68 என்ற தொலைபேசிக்கு அழைக்கவோ அல்லது www.np.gov.lk மற்றும் www.edumin.np.gov.lk இணையத்தளத்திலோ பார்வையிட முடியும் என கவிஞர் நதுநசி நூலாரசிரியர்களுக்கான நூல் தேர்வுப் போட்டிபற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.