கடலில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை பிடித்துள்ள இடம்
கடலில் அதிகளவான பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 14ஆவது இடத்தில் உள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சில் "பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தகவல் தொடர்பாடல் திட்டம்" நேற்று (08.11.2023) அமைச்சின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போதே குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடலில் சேரும் பிளாஸ்டிக் பொருட்கள்
நாட்டில் ஆறுகள் மற்றும் நீரோடைகள் மூலம் சுமார் 9700 மில்லியன் மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் சேர்வதாக இதுவரை பதிவான தரவுகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை கடலில் உள்ள மீன்களின் அளவை விட பிளாஸ்டிக்கின் அளவு அதிகரித்து வருகின்றதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, தெற்காசிய சுற்றாடல் ஒத்துழைப்புத் திட்டத்தின் (SAKEP) பணிப்பாளர் நாயகம் ரொக்கியா கார்ல்டன் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




