மதுபான விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சி
நாட்டில் மதுபான விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
மதுபான வகைகளுக்கான வரி அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2022ஆம் ஆண்டிற்கான வரி வருமானம் 27 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
கடந்த 2022ஆம் ஆண்டில் மதுபான வரிகள் மூலம் 185 பில்லியன் ரூபா வரி அறவீடு செய்ய உத்தேசிக்கப்பட்ட போதிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இலக்கினை அடைய முடியவில்லை என மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டில் வரி வருமானம் வீழ்ச்சியடைந்திருந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் மதுபான விற்பனை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
