அபிவிருத்தி போர்வையில் வடக்கு மற்றும் கிழக்கினை நோக்கி நகரும் சிங்கதேசம்! - இ.கதிர்
தமிழர்களின் சுயநிர்ணய அடிப்படையிலான கொள்கைத்திட்டம் அனைத்தும் வேரோடு புடுங்கி எறியும் சதி முயற்சியில் அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கு கிழக்கினை நோக்கி சிங்கதேசம் நகர்ந்து கொண்டிருக்கின்றதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்று (19.) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தமிழர்கள் என்ன நிலையில் இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் அதில் இருந்து நாங்கள் விலகி நிற்பதாக காணப்படுகின்றது. இந்த விடயங்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் மக்களுக்கு கொண்டு செல்வதாக தெரியவில்லை.
இலங்கை ஒரு நிழல் யுத்தம் ஒன்றினை எம் இனம் மீது நடாத்தி வருகின்றது. அதற்கான அனைத்து திட்டங்களும் தென்னிலங்கை நிறைவேற்றியுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழர்களின் சுயநிர்ணய அடிப்படையிலான கொள்ளைத்திட்டம அனைத்தும் வேரோடு புடுங்கி எறியும் சதிமுயற்சி நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது . அதற்காக அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கு கிழக்கினை நோக்கி சிங்கதேசம் நகர்ந்துகொண்டிருக்கின்றது.
இதில் முதல் நோக்கம் வடகிழக்கினை இரண்டாக பிரிப்பது இதற்கு திருகோணமலையில் புல்மோட்டையினையும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு ஆகிய இரண்டு பிரதேசத்தினையும் ஒன்றாக இணைத்து நகர அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்களக்குடியேற்றம் ஒன்றை பாரியளவில் நிறுவுவதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளன.
ஏற்கனவே முல்லைத்தீவில் மணலாற்று பகுதியில் பெருமளவான பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. தமிழர்களின் தாயக பகுதியான இதயபூவியினை சிதைக்கும் நோக்கில் நகர அபிவிருத்தி நோக்கத்துடன் வருகின்ற நிலமை பாரியளவிலான சிங்கள குடியேற்றத்தினை கொண்டுவந்து வடக்கினையும் கிழக்கினையும் பிரித்து தனியான தேர்தல் தொகுதியினை உருவாக்கி தனியான சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பாராளுமன்றம் கொண்டு செல்லும் திட்டம் கிழக்கு மாகாணத்திலும், வடமாகாணத்திலும் ,ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான நிலைப்பாடு காணப்படுகின்றது .
அதற்கு முன்னர் வடகிழக்கினை இரண்டாக பிரிக்கும் முயற்சி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான நோக்கம் இந்திய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்த சட்டம் ஊடாக வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு சுயாட்சி அலகு தமிழர்களுக்கு வழங்குவதை நிறுத்துவதற்கான திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
அதற்காக தான் மாகாணசபை தேர்தலை நடத்தாமல் அதனையும் பிற்போட்டுக்கொண்டு இலங்கையில் அரசியல் அமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினையும் புதிய அரசியல் அமைப்பு ஊடாக இரத்து செய்வதும் அல்லது அதனை செயலிழந்த கட்டமைப்பாக கொண்டு வருவதற்கான முயற்சியினையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது.
தற்போதைய சூழலில் நாங்கள் எதிர்காலத்தில் எவ்வாறான நிலமைக்குள் தள்ளப்படப்போகின்றோம் என்ற செய்தியினை எங்கள் அரசியல் தலைவர்களும்,மக்களும் புரிந்து கொள்ளவேண்டும். இதற்கான பெருமளவான நிதியினை இலங்கை நாட்டின் அபிவிருத்திக்க்காக சீனா வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கையினை முழுமையாக அபிவிருத்தி செய்து இனப்பிரச்சினைக்கு என்று கதையே இல்லாமல் தமிழர்களின் உரிமை பிரச்சினையினை வேரோடு பிடுங்கி எறிந்து இலங்கை நாட்டினை தனி பௌத்த நாடாக மாற்றி சிங்களவர்களிடம் ஒப்படைப்பதாக சீனா இலங்கைக்கு வாக்குறுதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் இருந்து கொண்டு நாங்கள் எதனை பற்றி சிந்திக்கின்றோம். எதிர்காலத்தில் எங்கள் இனம் அழிவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன ,தம்மைத்தாமே ஆட்சி செய்ய முடியாமல் தங்களின் பலவீனமாக செயற்பாட்டினாலும் மக்களால் தெரிவு செய்ய்பட்ட பிரதிநிதிகளின் மந்த நிலையாலும் உலகத்தில சில இனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த பரிதாப நிலை மக்களுக்கு வரக்கூடாது என்பதற்காக எங்கள் அரசியல்
வாதிகளுக்கும், மக்களுக்கும் தெளிவாக சொல்கின்றோம் .நாங்கள் தெளிவடைய வேண்டும் ஒன்றுமையாக செயற்படவேண்டும் .
இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கையினை முழுமையாக அபிவிருத்தி செய்து
இனப்பிரச்சினை என்ற கதையே இல்லாமல் தமிழர்களின் உரிமை பிரச்சினையினை வேரோடு
பிடுங்கி எறிந்து இலங்கை நாட்டினை தனி பௌத்த நாடாக மாற்றி சிங்களவர்களிடம்
ஒப்படைப்பதாக சீனா இலங்கைக்கு வாக்குறுதி வழங்கியுள்ளது
என்றும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
