எல்ல பகுதியில் மின்னல் தாக்கம் - ஒருவர் வைத்தியசாலையில்! இரண்டு வீடுகள் சேதம்
பண்டாரவளை - எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்தை பகுதியில் நேற்று (31.10.2022) மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இரண்டு குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த வீடுகளில் உள்ள பெறுமதிமிக்க மின்சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, வீட்டு மின் இணைப்புக்களும், வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளன. அத்தோடு, வீட்டின் சுவர்களும் முற்றாகச் சேதமடைந்துள்ளன.
மேலும், விபத்தின் பின்னர் எல்ல பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் ஆகியோர், பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.







பதினாறாவது மே பதினெட்டு 17 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
