திருகோணமலையில் பிக்கு ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல்: பொலிஸாரிடம் முறைப்பாடு
திருகோணமலை- பொரலுகந்த ரஜமஹா விகாரை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மொரவெவ- தெவனிபியவர இந்ரா ராம விகாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி நேற்றுமுன்தினம் (11.09 2023) ஆம் திகதி இம்முறைப்பாட்டினை செய்துள்ளார்.
அம்முறைப்பாட்டில் சொகுசு வெள்ளை வானில் நான்கு பேர் தனக்கு சொந்தமான இரண்டு விகாரைகளுக்கும் தேடிச் வந்ததாகவும், குறித்த வேனில் வருகை தந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அம்முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை வான் தொடர்பில் வாக்குமூலங்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலை இலுப்பை குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பொரலுகந்த ரஜமஹா விகாரையின் நிர்மாண பணிகளை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னின்று செய்ததாகவும், அதனால் தனக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விகாரைக்கு வருகை தந்த வெள்ளை வான் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்று வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 23 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
