ஒமிக்ரோனால் தோற்றுவிக்கப்படும் பாதுகாப்பு! ஆய்வில் வெளிவந்த தகவல்
அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை கோவிட் தொற்றிடம் இருந்து ஒமிக்ரோன் வகை கோவிட் தொற்றால் பாதுகாப்பு கிடைக்கும் என்று தென் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணா்கள்,
ஒமிக்ரோன் வகை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 33 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினோம். ஏற்கெனவே கோவிட் தடுப்புசி செலுத்தப்பட்டோ, டெல்டா வகை கோவிட்டால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததன் மூலமோ அந்த வகை தீ நுண்ணுயிரிக்கு எதிரான எதிா்ப்பாற்றல் கொண்டவா்கள் மட்டும் இந்த ஆய்வுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
ஆய்வு தொடங்கிய 14 நாள்களில், நோயாளிகளின் உடலில் இருந்த ஒமிக்ரோன் வகை கோவிட் தொற்றின் பரவல் திறன் அழிக்கப்படுவது 14 மடங்கு அதிகரித்தது.
அதே நேரம், டெல்டா வகை கோவிட் பரவல் திறன் அழிக்கப்படுவதும் 4.4 மடங்கு அதிகரித்தது.
இதன் மூலம், ஒமிக்ரோன் வகை கோவிட்டால் பாதிக்கப்பட்டவா்களின் உடலில் உருவாகும் நோயெதிா்ப்பு ஆற்றல், அவா்களை மீண்டும் டெல்டா வகை கோவிட் தாக்குவதில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கக் கூடும் என்பது தெரியவந்தது என்று தெரிவித்துள்ளார்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan