ரணிலின் கருத்தை நிராகரிக்கும் சுமந்திரன்(Video)
தமிழ் கட்சிகள் அரசாங்கத்துடன் பங்களிப்பை ஏற்படுத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்கும் கூற்று பிழையானது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(02.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதியோடு தமிழ் கட்சிகள் சேர்ந்து நிற்க வேண்டும் என அவர் விரும்புவது இனப்பிரச்சினைக்கு தீர்வளிக்கும் என கூறினால் அது நகைப்பிற்குரிய விடயமாகும்.
தமிழ் மக்களுடைய நிலைப்பாடு நன்றாகவே ஜனாதிபதிக்கு தெரியும். இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான எல்லா வழிமுறைகளும் உண்டு.
இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று முன்வைக்கப்பட்ட பிறகுதான் மத்திய அரசாங்கத்திலே தமிழ்கட்சிகளின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை காணலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவர் கூறிய விரிவான விடயங்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
