தம்மிக்க பாணி மருந்துக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து
கோவிட் வைரஸுக்கு மருந்தாக ஊக்குவிக்கப்பட்ட ‘தம்மிக்க பெனிய"என்ற மருந்துக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆயுர்வேத ஆணையாளர் தம்மிக்க அபேகுணவர்தன இதனை அறிவித்துள்ளார்.அவரின் மருந்துக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் மருத்துவ பரிசோதனைகளின் போது, அவர் கூறியது போன்று, மருந்து பயனுள்ளமை நிரூபிக்கபடவில்லை.இதன் விளைவாக, தற்காலிக உரிமம் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அபேகுணவர்தன கூறியுள்ளார்.
ஆயுர்வேத பயிற்சியாளர் தம்மிக்க பண்டார கடந்த ஆண்டு, தமது மருந்தை அறிமுகப்படுத்தினார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் தம்மிக்க பண்டாரவின் கோவிட் மருந்தை பரிசோதித்தவர்களில் ஒருவராவர்.
கேகாலை ஹெட்டிமுல்லாவைச் சேர்ந்த ஆயுர்வேத பயிற்சியாளர் தம்மிக்க பண்டார நாடாளுமன்றத்தில் சபாநாயகரை சந்தித்து இந்த மருந்தை வழங்கியிருந்தார்.
