இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை - இத்தாலி இடையில் உரிமங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்திற்கமைய, சாரதி அனுமதிப்பத்திர மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திர மாற்றத்திற்கான அதிகளவிலான கோரிக்கைகள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், ஏப்ரல் 10 மற்றும் 15 ஆகிய திகதிகள் இதற்காக விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த 2 நாட்களில் ரோமிலுள்ள இலங்கை தூதரகத்தின் தூதரகப் பிரிவு சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்களை மட்டுமே கையாளும் என குறிப்பிடப்படுகின்றது.
அவசரத் தேவை
ஏனைய அனைத்து தூதரக சேவைகளும் இந்த இரண்டு தினங்களில் அவசரத் தேவைகளுக்காக மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.

விண்ணப்பங்களின் கோரிக்கையை திறம்பட நிர்வகிக்கும் நோக்கில் இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 15ஆம் திகதிக்குப் பிறகு வழமையான நடைமுறைகள் தொடரும் என்பதால் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தங்கள் அனுமதிப்பத்திரங்களை மாற்றிக்கொள்ள முடியும் என தூதரகம் அறிவித்துள்ளது.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam