நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் சபாநாயகருக்கு பறந்த கடிதம்
உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருந்த அமைச்சர்கள் உட்பட 76 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
சபாநாயகருக்கு கடிதம்
குறித்த அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களால் 12 மில்லியன் ரூபாய்கள் செலுத்த வேண்டியுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 76 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏற்கனவே உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேறியவர்களும் இன்னும் அவற்றில் வசிப்பவர்களும் அடங்குகின்றனர்.
இந்த பட்டியலில் 4.4 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக கடன்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 34 பேரும், 4.1 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாக மிகுதி வைத்திருக்கும் 27 உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நாடாளுமன்ற
உறுப்பினர்கள் இதேவேளை, ஏற்கனவே உயிரிழந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 3.2 மில்லியன் ரூபாய் நீர் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும் நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
