லிட்ரோ நிறுவன தலைவரின் பதவி நீக்கத்தை ரத்து செய்து கடிதம்!
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தேஷார ஜயசிங்கவை நீக்கி கடந்த 12ம் திகதி அனுப்பப்பட்ட கடிதம் நேற்று (ஜன.19) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தேஷார ஜயசிங்கவை நீக்கிவிட்டு புதிய தலைவராக ரேணுகா பெரேராவை நியமிக்குமாறு கடந்த 12ஆம் திகதி நிதியமைச்சின் செயலாளர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் மூலம் பணிப்புரை விடுத்திருந்தார்.
பின்னர், ஜனாதிபதி லிட்ரோ எரிவாயு வளாகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, ரேணுகா பெரேராவின் நியமனத்தை இரத்து செய்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக தேஷார ஜயசிங்கவை நியமிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.
இதன்படி கடந்த 12ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பதவி மாற்றம் தொடர்பில் நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட கடிதம் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கம்பனி செயலாளருக்கு இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
