ஜனாதிபதி அநுரவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள உக்ரேன் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, விசேட நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்றையதினமை் வாழ்த்து செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உக்ரேன் ஜனாதிபதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கையுடனான நட்பு
பரஸ்பர மரியாதை, அமைதி மற்றும் செழிப்புக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை அடிப்படையாக கொண்ட இலங்கையுடனான நட்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை உக்ரைன் பாராட்டுவதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வளர்ச்சிக்கு ஆற்றலைக் கொண்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



