பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து இலங்கைக்கு வந்த நன்றி கடிதம்!
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கடிதம் அனுப்பிய இலங்கை இளைஞருக்கு பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கந்தளை - வெந்திரசன் புர 16 ஆம் இலக்கத்தில் வசிக்கும் ஆர்.யூ. மலின் திவங்க என்ற இளைஞருக்கே இவ்வாறு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக தயார் செய்த 300 ரூபாவை இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முத்திரையுடன் அனுப்பியதாகவும், இந்த வாழ்த்து அட்டைக்கு 15 ஆம் திகதி பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து அரச குடும்பத்தின் புகைப்படம் மற்றும் கையொப்பமிடப்பட்ட நன்றிக் கடிதம் அடங்கிய அட்டை கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த இளைஞர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முடிசூட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இணையத்தில் அரச குடும்பத்தாரிடம் உரையாட ஆங்கிலத்தில் ஒரு சிறப்பு சொற்களஞ்சியம் ஒன்றைக் கண்டுபிடித்து இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பினேன். ஆனால் பதில் வரும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை.
ஆனால் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ முத்திரையுடன் கூடிய ஒரு உறையில் எனக்கு நன்றி அட்டை அனுப்பப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து இப்படியொரு செய்தி இலங்கையில் ஒரு சாதாரண மனிதனுக்கு மிகவும் அரிதானது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
