நீதிக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை
தமிழர் தேசத்தின் மீதான இலங்கை அரசின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எதிராக, தமிழர் தாயகத்தில் எழுச்சி கொண்டுள்ள 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை' எனும் அறவழிப் போராட்டத்துக்கு, புலம்பெயர் தமிழர்களின் உறுதுணையினை வெளிப்படுத்தும் கூட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டமானது இணையவழி சூம் (*ZOOM ID : 869 2715 – 7679 / passcode : 161681 / *https://us02web.zoom.us/j/86027157679?pwd=dmhiMURFQmwrMUdCbGRHSGlFZjREUT09 ) செயலி மூலம் நேரம் (NY: 10 am / UK : 3 pm / EU : 4 pm / SL : 8:30 pm) இடம்பெறுகின்றது.
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஒன்றுபட்டு ஓங்கி ஒலிக்கும் நீதிக்கான குரலுக்கு உறுதுணை வழங்கப் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், சமூக, அரசியல் ஆர்வலர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கெடுத்து தாயகம் நோக்கிய தோழமையினை வெளிப்படுத்துமாறு வேண்டப்பட்டுள்ளது.






தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
