போரால் அவல வாழ்வைச் சந்தித்துள்ள வடக்கு மக்களின் எதிர்காலத்தைப் பலப்படுத்துவோம் : சஜித்
முப்பது வருட கால யுத்தத்தின் சாபத்தால் அவல வாழ்வைச் சந்தித்துள்ள வடக்கு மாகாண மக்களின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன மன்னார், தொட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (15) நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அபிவிருத்தித் திட்டங்கள்
அவர் மேலும் உரையாற்றுகையில், சரியான திட்டமிடல் ஊடாக சரியான தொலைநோக்குப் பார்வையில் மிக இலகுவாகக் கட்டியெழுப்பக்கூடிய மாவட்டமாக இந்த மன்னார் மாவட்டத்தை நான் பார்க்கின்றேன்.
இங்கு 5 பிரதேச செயலகப் பிரிவுகள், 153 கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் 382 கிராமங்கள், குக்கிராமங்கள் காணப்படுகின்றன.

மன்னாரின் எதிர்கால அபிவிருத்திக்காக மன்னாருக்குத் தனியான ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்படும். இந்த ஜனாதிபதி செயலணி ஊடாக ஐந்து பிரதேச செயலகத்திலும் 5 பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பேன்.

அடிமட்டத்தில் இருந்து பெறப்படும் கருத்துக்கள் ஆலோசனைகளின் பிரகாரம் வகுக்கப்படும் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பேன். இதன் ஊடாக கடற்றொழில், சுற்றுலா கைத்தொழில், விவசாயம், வர்த்தகத்தகை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
சம்பிரதாய திட்டம்
இவர்களை இணைத்துக்கொண்டு மன்னார் மாவட்டத்தைக் கட்டியெழுப்போம்.
போரால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்குப் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக சேவையாற்ற முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்நாட்டின் 76 ஆண்டுகால வரலாற்றில் முன்னெடுக்கப்பட்ட சம்பிரதாய திட்டம் என்று பிரபஞ்சம் திட்டத்தைக் கூற முடியாது.
அரச நிதிகளால் இந்தத் திட்டங்கள் எம்மால் முன்னெடுக்கப்படவில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நன்நோக்கில் எமக்கு வழங்கப்படும் நன்கொடையாளர்களின் பங்களிப்பிலயே இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் என கூறியுள்ளார்.

இதன்போது, பாடசாலை நூலகத்துக்குத் தேவையான ஆங்கில நூல்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்துக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam