ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலாக பணிப்புறக்கணிப்புக்கு செல்வோம்: சுகாதார தொழில் நிபுணர் சங்கம்
கோவிட் சட்டத்தை கோவிட் கட்டுப்பாடு என்ற பெயரில் அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்தால், ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும் என சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து குமுதேஷ் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அரச சேவையின் செயல் திறனை அதிகரிப்பது சம்பந்தமாக வரவு செலவுத்திட்டத்திற்குள் முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகள் முரணானவை.
ஓய்வுபெறும் வயது 65 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் வழமையாக ஓய்வுபெறுவோருக்கு 10 ஆண்டுகளுக்கான ஓய்வூதியம் கிடைக்காது போகும் அடையாளங்கள் தென்படுகின்றன.
அரச சேவையின் ஊதிய முரண்பாடுகள், சுகாதார ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் சம்பந்தமாக வரவு செலவுத்திட்டத்தில் தீர்வுகள் இல்லை.
ரணுக்கோவின் அரச ஊழியர்களுக்கான ஊதிய பரிந்துரைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன எனவும் ரவி குமுதேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 10 மணி நேரம் முன்

ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் Manithan

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri
