அநுர அரசை மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம்: ஐக்கிய மக்கள் சக்தி சூளுரை
மக்களின் ஆணைக்கு மாறாகச் செயற்படும் அநுர அரசை மக்களின் பேராதரவுடன் மிக விரைவில் வீட்டுக்கு அனுப்பிவைப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த அரசு ஆட்சிக்கு வந்ததால் மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை.
பொய்யான வாக்குறுதிகள்
அநுர தரப்பினர் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என்று தற்போது நிரூபணமாகியுள்ளன.
ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுகளையே இந்த அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. மக்களின் ஆணைக்கு மாறாகச் செயற்படும் இந்த அரசை மக்களின் பேராதரவுடன் மிக விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.
ஐக்கிய மக்கள் சக்தியை ஆட்சிப்பீடத்தில் மக்கள் அமர்த்துவார்கள். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய காலத்தில் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



