முடக்கம் அமுல்படுத்தப்பட்டும் மெல்பேர்னில் குறையாத கோவிட் தொற்றாளர்கள்
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகர் முடக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அங்கு கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தொற்றாளர்கள் எண்ணிக்கை குறையாமைக்கு காரணம் மெல்பேர்ன் வாசிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணம் என சுகாதார துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மெல்பேர்ன் நகரில் ஆயிரத்து 438 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மெல்பேர்ன் நகரம், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அமைந்துள்ளது.
மெல்பேர்ன் வாசிகள் முடக்கத்துக்கு எதிராக வீதியில் இறங்கி எதிர்ப்புகளில் ஈடுபடுவது மற்றும் பொலிஸாருக்கு தெரியாமல் வீடுகளில் இணைந்து விருந்துகளை நடத்துவதே தொற்றாளர்கள் குறையாமைக்கான காரணம் என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவிட் தொற்றாளர்கள் குறையவில்லை என்றால், லொக் டவுனை மேலும் நீடிக்க நேரிடும் என விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அவுஸ்திரேலிய சுகாதார அதிகாரிகளின் தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நவடிக்கை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
எவ்வாறாயினும் சில அவுஸ்திரேலியர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் போதிய அக்கறை காட்டுவதில்லை என சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.