நுவரெலியாவில் தூங்கி கொண்டிருந்த நாயை வேட்டையாடிய சிறுத்தை
நுவரெலியா - கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்ற காணொளிக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டில் நேற்றிரவு(17.08.2025) உறங்கிக் கொண்டிருந்த இரண்டு நாய்களில் ஒன்றை, சிறுத்தை இழுத்துச் செல்வது அந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
சிறுத்தைகளின் நடமாட்டம் தோட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ளதன் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளதோடு, நாய்களை வேட்டையாடும் சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றது.
கோரிக்கை
இந்நிலையில், இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகி உள்ளது. இந்தக் காணொளிக் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் அதினமாக பரவி வருகின்றது.
இதனால் மேலும் பீதியடைந்துள்ள அந்த பகுதி மக்கள், குடியிருப்பு பகுதிக்குள் நடமாடி வரும் சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam
