மலசலகூடத்தில் சிக்கியிருந்த சிறுத்தைக்குட்டி பாதுகாப்பாக மீட்பு (video)
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெரோல் தோட்டத்திலுள்ள குடியிருப்பு ஒன்றின் மலசலகூடத்தில் நான்கு மாத சிறுத்தைக்குட்டி ஒன்று காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (26.02.2023) பதிவாகியுள்ளது.
தோட்ட தொழிலாளி ஒருவரின் வீட்டு மலசலகூடத்திலே குறித்த சிறுத்தை குட்டி காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறுத்தைக்குட்டி
எனவே சிறுத்தையை அங்கிருந்து மீட்பதற்காக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனஜீவராசி அதிகாரிகள் குறித்த சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டு, காட்டு பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை ஹெரோல் தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் அத்தோட்டத்தில் உள்ள நாய்கள் சிறுத்தைகளால் வேட்டையாடப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
