யாழில் மீன் சந்தை வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை(Photos)
கல்வியங்காடு மீன் சந்தையில் அங்கீகரிக்கப்படாத, நிறுக்கும் கருவி பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்ட 13 வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று கல்வியங்காடு மீன்சந்தையில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வியாபாரத்திற்கு பயன்படுத்த முடியாத கருவிகள்
அங்கு வியாபார நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினரால் அங்கீகரிக்கப்படாத, வியாபாரத்திற்கு பயன்படுத்தமுடியாத 13 நிறுக்கும் கருவிகளை வியாபாரிகள் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு எதிராக
சட்ட திணைக்களத்தினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.






புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
