யாழில் 11 வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை (Photos)
யாழ்ப்பாணத்திலுள்ள பண்ணை மீன் சந்தை, நாவாந்துறை மீன் சந்தை, காக்கைதீவு மீன் சந்தை, சின்னக்கடை மீன் சந்தை ஆகிய இடங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சோதனை நேற்றைய தினம் (01.03.2023) அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகஸ்தர்களால் நடத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளைப் பரிசோதித்தபோது, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளைப் பயன்படுத்திய 11 வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இனிவரும் காலங்களில் நிறுவை அல்லது அளவை நிறுக்கும் அல்லது அளக்கும்
உபகரணங்களை வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் வியாபார நிலையங்களையும்
திடீர் சோதனை மேற்கொள்ளப்படும் என வர்த்தகர்கள் நுகர்வோருக்கு நம்பகரமான
சேவையை வழங்க முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
