எல்லை தாண்டும் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை: அமைச்சர் டக்ளஸ் (Photos)

Indian fishermen Douglas Devananda Sri Lanka Politician India Sri Lanka Fisherman
By Rakesh Sep 05, 2023 02:27 AM GMT
Report

இலங்கையின் கடல் எல்லைகளைத் தாண்டிச் சென்று சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் மனிதாபிமான நடவடிக்கையாக ஒரு வார காலத்தினுள் விடுவிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் சர்வதேச எல்லைகளைத் தாண்டி தொழிலில் ஈடுபடுவதனால் ஏற்படக்கூடிய பாதகங்கள் தொடர்பாகவும் இதன்போது அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடிப் படகு உரிமையாளர் சங்கத்துடன் நேற்று (0409.2023) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எல்லை தாண்டும் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை: அமைச்சர் டக்ளஸ் (Photos) | Legal Action Against Illegal Fishing Douglas

படகுக் கண்காணிப்புப் பிரிவு

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் கடற்றொழில் அமைச்சின் படகுக் கண்காணிப்புப் பிரிவினரால் அவதானிக்கப்பட்டு வருவதுடன் அவ்வாறு எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக 185 இற்கு மேற்பட்ட படகுகள் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

புதிய மைல் கல்லை தொட்ட யாழ்.மத்திய பேருந்து நிலையம்: டக்லஸ்

புதிய மைல் கல்லை தொட்ட யாழ்.மத்திய பேருந்து நிலையம்: டக்லஸ்

அவை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள், படகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவி போதிய மின்சாரமின்மையால் செயலிழக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன எனவும், அது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லை தாண்டி மீன் பிடிக்க வேண்டிய நிலையேற்படும் எனவும் குறிப்பிட்டனர்.

அத்துடன் தற்போது தடுத்த வைக்கப்பட்டுள்ள படகுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளைச் செய்யும் படகின் படகோட்டிகளுக்குக் கடற்றொழில் அமைச்சால் உரிய தண்டணை வழங்குவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் தெரிவித்தனர்.

சர்வதேச அமைப்புக்களால் தடை 

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் , இலங்கையிலுள்ள அனைத்து ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளும் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் வி.எம்.எஸ். கட்டமைப்பின் ஊடாக கண்காணிக்கப்படுகின்றன எனவும், தவறு செய்யும் படகுகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படா விட்டால் சர்வதேச அமைப்புக்களால் தடை விதிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

எனவும், எனவே எமது கடற்றொழிலைப் பாதுகாப்பதற்காக கண்டிப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது எனவும், அதற்கு கடற்றொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

எல்லை தாண்டும் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை: அமைச்சர் டக்ளஸ் (Photos) | Legal Action Against Illegal Fishing Douglas

மேலும், சர்வதேச கடற்பரப்பில் தவறு செய்யும் ஒருசில படகுகள் காரணமாக எமது கடற்றொழில் முற்றாக அழிவடைவதற்கு இடமளிக்க முடியாது எனவும், நாட்டுக்குப் பெருமளவு அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கும் இத் தொழிலைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் என்று சுட்டிக்காட்டினார்.

புதிய கடற்றொழில் சட்டம்: அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள தகவல்

புதிய கடற்றொழில் சட்டம்: அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள தகவல்

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டு தடை விதிக்கப்பட்ட பல படகுகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளன எனவும், விரைவில் இந்த விடயம் தொடர்பாக பூரணமாக ஆராய்ந்து எஞ்சியுள்ள ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளையும் மனிதாபிமான ரீதியில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொடர்ந்தும் இவ்வாறான தவறுகளைச் செய்தால் அவ்வாறு தவறு செய்யும் படகுகளுக்கு 6 மாதங்கள் தடை விதிப்பதற்கான சட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சு மற்றும் திணைக்களத்தின உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US