லெபனான் - ஈரானுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்த அமெரிக்கா
மத்தியகிழக்கில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள லெபனான் - இஸ்ரேல் முறுகளுக்கு மத்தியில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
சர்வதேச தரப்புக்கள் குறித்த மோதலை நிறுத்துவதற்கான அழுத்தத்தை வெளியிட்டுவரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் தூதுவர் லெபனானின் பிரதமர் நஜிப் மிகடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் தூதுவர் அமோஸ் ஹோச்ஸ்டீனுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஈரானின் இஸ்லாமிய ஆலோசனைக் குழுவின் தலைவர் முகமது பாகர் கலிபாஃப்பும் கலந்துகொண்டுள்ளார்.
பிராந்திய போர்நிறுத்த முயற்சி
பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் போர்நிறுத்தத்தைப் பெறுவதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்து மிகட்டி விவாதித்தார் என்று லெபனானின் தரப்பு தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டில் ஈரானின் இஸ்லாமிய ஆலோசனைக் குழுவின் தலைவரை சந்தித்த மிகட்டி, லெபனான் அரசாங்கத்தின் முன்னுரிமை, போர்நிறுத்தத்தை நோக்கிச் செயல்படுவது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிறுத்துவது மற்றும் லெபனான் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது" தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது அமெரிக்க ஜனாதிபதியின் தூதுவர், லெபனான் இஸ்ரேல் பிராந்தியங்களில் உள்ள ஹிஸ்புல்லா படைகள் பின்வாங்க வேண்டும் என்றும் எல்லைப் பகுதியில் லெபனான் இராணுவம் மட்டுமே நிலைநிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பங்கருக்குள்ளேயே வெடிக்கப்போகும் ஈரானின் அணுகுண்டுகள்!! ஈரான் ஊடகவியலாளர் கூறுகின்ற அச்சம்தரும் தகவல்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
