இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை விடுமுறை, 4ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுமுறை விபரம்
மேலும், மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் 5ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் 5ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும், இதனையடுத்து டிசம்பர் 23ஆம் திகதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை நத்தார் பண்டிகைக்காக பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்காக, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நிறைவடையும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 16ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதிவரை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.
பின்னர் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டத்தை மார்ச் முதலாம் திகதி தொடக்கம், மார்ச் 21 வரை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திகதிகள் தொடர்பான அறிவிப்பு

இதேவேளை, இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரம், க.பொ.த. உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் (2023) ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 5 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri