அரச ஊழியர்களுக்கு 05 வருட சம்பளமில்லாத விடுமுறை! நீதித்துறை குறித்து முக்கிய அறிவிப்பு
நீதித்துறை அதிகாரிகளால் சம்பளம் இன்றி சமர்ப்பிக்கப்படும் வெளிநாட்டு விடுமுறை கோரிக்கைகளை பரிசீலிப்பதில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நீதித்துறை சேவையில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் சேவை தேவைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
05 வருட சம்பளமில்லாத விடுமுறை
வெளிநாட்டில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு 05 வருட சம்பளமில்லாத விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையின்படி, நீதித்துறை அதிகாரிகளின் சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை கோரும் விண்ணப்பங்களை இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரிசீலிக்க முடியாது என்று நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு, அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 14 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri