வாகனங்களுக்கான குத்தகை வசதி விகிதங்களில் மாற்றம்: மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
வாகனங்களுக்கான குத்தகை வசதிகளை வழங்குவதற்கான விகிதங்களை திருத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
அதன்படி, வணிக வாகனங்களுக்கான விகிதத்தை 70% ஆகவும், தனியார் வாகனங்களுக்கான விகிதத்தை 50% ஆகவும் திருத்த மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம், இலங்கை மத்திய வங்கி தொடர்புடைய குத்தகை வசதிகளுக்கான கடன் விகிதங்களை வணிக வாகனங்களுக்கு 80%, தனியார் வாகனங்களுக்கு 60%, முச்சக்கர வண்டிகளுக்கு 50% மற்றும் பிற வாகனங்களுக்கு 70% என வழங்கியது.

கடன் விகிதங்கள்
இருப்பினும், கடந்த ஜூலை மாதம், குத்தகை வசதிகளுக்கான கடன் விகிதங்கள் 4 வகைகளின் கீழ் வழங்கப்பட்டன.
இவை இரண்டு வகைகளின் கீழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒரு வகை வணிக வாகனங்களாகவும், மற்றொரு வகை கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |