மன்னாரில் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரண நிலையம் திறந்து வைப்பு
மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட உள்ளூர் உணவு உற்பத்திகளின் விற்பனை நிலையம் மற்றும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரண நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையமானது இன்று (21) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்டச் செயலக வளாகத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பலர் பங்கேற்பு
நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், புலம்பெயர் உறவுகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள், உதவி மாவட்ட அரசாங்க அதிபர், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உள்ளூர் கைத்தொழில் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.