கிண்ணியாவில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி முற்றுகையிடப்பட்டுள்ளது.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று (03) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பெருமளவிலான கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட உபகரணங்கள்
கிண்ணியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கசிப்பு சேகரித்து வைக்கப்படும் 16 பீப்பாய்களும், 3200 லீட்டர் கோடாவும் மற்றும் ஏனைய உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருப்பினும், பொலிஸாரின் வருகையை அவதானித்த சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதால், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளிலும், அவர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளிலும் கிண்ணியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




