மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 720,000 மில்லி லீட்டர் கோடா அழிப்பு
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனைப்பாலம் பகுதியில் செயல்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று (19.03.2026) முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதையொழிப்பு வேலைத்திட்டம்
ஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, இன்று(19) பிற்பகல் மண்முனைப்பாலத்திற்கு அருகிலுள்ள கன்னக்காடு பகுதியில் இரகசியமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது, நான்கு பறல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கசிப்பு காய்ச்ச பயன்படும் சுமார் 720,000 மில்லி லீட்டர் கோடா பொலிஸாரினால் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டது.
இப்பகுதியில் தொடர்ந்து சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அண்மைக்காலமாக பல கசிப்பு உற்பத்தி நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
எனினும், சம்பவ இடத்தில் இருந்த சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து வருவதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri