நேற்று வாங்கிய சிலிண்டரிலும் கசிவு! இன்று வாங்கிய சிலிண்டரிலும் கசிவு: மக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை
இலங்கையில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் கசிவு ஏற்படும் சம்பவங்கள் மற்றும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகி வருகின்றமை மக்கள் மத்தியில் இன்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமையல் எரிவாயு விற்பனை நிலையமொன்றில் வீட்டுப் பாவனைக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்படுவதை பாவனையாளர் ஒருவர் அவதானித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த எரிவாயு சிலிண்டரின் விற்பனை நிலையத்தைத் தொடர்பு கொண்டு குறித்த எரிவாயு சிலிண்டரை மாற்றித் தருமாறு கூறியதற்கு அமைய புதிய எரிவாயு சிலிண்டர் ஒன்று எரிவாயு விற்பனை நிலையத்தால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து எரிவாயு சிலிண்டரை விநியோகித்த நபரின் கவனத்துக்கு பாவனையாளர் கொண்டு சென்றதையடுத்து எரிவாயு சிலிண்டரை விநியோகித்த குறித்த நபர் சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்துக்குத் தொடர்பு கொண்டு தெரியப்படுத்திய சம்பவம் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
இதே போன்று உங்களுடைய வீடுகளிலும் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்படுவதை
அவதானித்தால் அல்லது உணர்ந்தால் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு
சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்கள் அல்லது சமையல் எரிவாயு நிறுவனத்தின்
வாடிக்கையாளர் சேவை பிரிவுக்குத் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு துறைசார்
அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
