மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களால் துண்டுப்பிரசுரம் விநியோகம் (photo)
உலக ஊடகவிலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தண்டனை விலக்களிப்பை ஒழிக்கும் சர்வதேச தினத்தையிட்டு "தண்டனை விலக்களிப்புக்கு எதிர்ப்பை தெரிவியுங்கள் ஊடகவியலாளர்களிடம் இருந்து ஒரு வேண்டுகோள்" எனும் தொனிப் பொருளில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
துண்டுபிரசுரம் விநியோகம்
மட்டக்களப்பு நகரில் ஊடகவியலாளர்களால் நேற்று (02.11.2022) துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கம், திருகோணமலை மாவட்ட
ஊடகவியலாளர் சங்கம், யாழ். ஊடக மையம், கிழக்கு ஊடக மையம், தெற்கு ஊடக மையம்
இணைந்து இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில்
முன்னெடுத்தனர்.
இதற்கமைய கிழக்கு ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் ஒன்று திரண்டு மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் மற்றும் பேருந்து தரிப்பு நிலையத்திலும் மக்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.








16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
