இன்னும் ஒரு வருடத்தில் எந்த நாட்டு உரமும் எமக்கு தேவையில்லை - காணி அமைச்சர்
நாம் இப்போது சேதன பசளை உற்பத்தி செய்து வருகின்றோம், இன்னும் ஒரு வருடத்தில் எந்த நாட்டு உரமும் எமக்கு தேவையில்லை எமது நாட்டிலே தேவையான உரத்தைத் தயாரிக்க முடியும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன (S.M.Chandrasena) தெரிவித்துள்ளார்.
சேதனப் பசளை தயாரிக்கும் இடம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று பி.ப. 4.30 மணிக்கு சந்திவெளியில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நான் சந்தோசம் அடைகின்றேன். எமக்கு இரு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது மட்டக்களப்பில் இருக்கின்றார்கள்.
எமது ஜனாதிபதி நாட்டை கட்டியெழுப்ப மிகவும் பாடுபடுகிறார். சேதன பசளை உரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முதலாவது காரணம் எமது மக்களின் சுகாதார பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இன்று எமது மக்கள் சிறுநீரக நோய் மற்றும் பல நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை வைத்தியசாலை வரவு ஏட்டில் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
வடக்கு, கிழக்கைத் தவிர மற்ற மாவட்டங்களில் சேதன பசளை நடைமுறையில் இன்னும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 36 நிமிடங்கள் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
