தலைவர்கள் பொருளாதாரத்திற்கு பொறுப்பு கூறும் வகையில் சட்டம் உருவாக்க நடவடிக்கை - சாகல ரட்நாயக்க
தலைவர்கள் பொருளாதாரத்திற்கு பொறுப்பு கூறும் வகையில் சட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு குறித்து சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
வத்தளையில் நேற்று (12.11.2022) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமற்ற தீர்மானங்கள்
பொருளாதார முகாமைத்துவத்தில் பொருத்தமற்ற தீர்மானங்களை எடுத்ததன் விளைவுகளை நாட்டு மக்கள் அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு தனியார் துறையினர் வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் அழுத்தங்களை களைந்து நாட்டை அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதியின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் ஏற்றுமதியை விஸ்தரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.