மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மனோ கணேசன்
கோவிட் தொற்றினால் சுகவீனமுற்று சுமார் பத்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) பூரண சுகம் பெற்ற நிலையில் இன்று வீடு திரும்பியுள்ளார்.
ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
சுகவீனமுற்ற வேளையில் எனக்கு ஆறுதல்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து, மத வழிபாடுகளிலும் ஈடுபட்டு, அன்பையும், நம்பிக்கையையும் நேரடியாகவும், ஊடகங்கள், தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் தெரிவித்த கட்சி, கூட்டணி, நண்பர்கள், ஆதரவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை மனோ கணேசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்..........
மனோ கணேசன் எம்.பிக்கு கொரொனா தொற்று உறுதி!
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam