எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பிலான ஆய்வு கூட்டத்தில் பங்குகொண்ட சஜித்!
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தீப்பரவல் தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்க இன்று நீதி அமைச்சில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாசவும் கலந்து கொண்டுள்ளார்.
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விவாதிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பைக் கடந்த வாரம் பிரேமதாச ஏற்றுக்கொண்டார்.
துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் பிரேமதாசவுக்கான அழைப்பை விடுத்தார்.
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து பிரேமதாச கருத்து தெரிவித்த பின்னர் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 170க்கும் மேற்பட்ட ஆமைகள், 20 டொல்பின்கள் மற்றும் 4 திமிங்கிலங்கள் கொல்லப்பட்டுள்ளன.
இதனையடுத்து எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்கள் இலங்கைக்கு இடைக்கால இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டனர்.
கடந்த மே மாதம் கொழும்பு கடலில் இரசாயனங்களுடன் சரக்குகளை ஏற்றி வந்த எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றிக்கொண்டது.
இதன்போது சரக்குகளுடன் கூடிய எட்டு கொள்கலன்கள் கடலில் வீழ்ந்தன, அவற்றிலிருந்த குப்பைகள் மற்றும் பொதிகள் கொழும்பு முதல் நீர் கொழும்பு வரை கடற்கரையில் கரை ஒதுங்கின. கப்பல் இறுதியில் இலங்கை கடலில் மூழ்கியது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
