வட மாகாணத்திற்கு வருகை தரவுள்ள எதிர்க்கட்சி தலைவர்
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவரான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆறு நாட்கள் பயணம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை தொடர்ந்து ஜனவரி 7இல் ஆரம்பிக்கும் அவர் முதலாவதாக வவுனியா, மன்னார் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதுடன் ஜனவரி 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
ஜனவரி 10ம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்லும் சஜித் பிரேமதாஸ ஜனவரி 11 மற்றும் 12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
இதன்போது பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், பல்வேறுபட்ட சந்திப்புகளையும், கூட்டங்களையும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
