கடந்த கால ஊழல்களுக்கும் தண்டனை அவசியம்! லக்ஷ்மன் கிரியெல்ல
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகளுக்கும் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு ஏற்ற வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஊழலுக்கு எதிரான சட்டத்தை கடந்தகாலங்களுக்கும் செல்லுபடியாகும் வகையில் பின் திகதியிடப்பட்ட சட்டமாக உருவாக்க வேண்டும் என்றும் எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இன்றைய நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்
இதுவரையில் தயாரிக்கப்பட்ட ஊழல் ஒழிப்புச் சட்டத்தை பல சட்டத்தரணிகளுடன் ஆய்வு செய்துள்ளோம். இந்தச் சட்டம் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து எமக்கு இருக்கின்றது.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகளுக்கத் தண்டனை வழங்கும் வகையிலும் ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், இதற்கு தனியான ஷரத்து இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய கிரியெல்ல, அதில் உள்ளடக்கப்பட்டுள்ள இடைக்கால ஷரத்து போதாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.




