துமிந்தவின் விடுதலையில் சர்ச்சை - ஜனாதிபதியிடம் விளக்கம் கோரும் சட்டத்தரணிகள்
மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமை குறித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கொலை குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கும்போது உரிய செயல்முறை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கோரியுள்ளது.
இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் போது, விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரின் பரிந்துரைகளை பெற வேண்டுமென அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான சூழ்நிலைகள் மற்றும் மன்னிப்பு பெற அவர் எப்படி தகுதியானவர் என்பதற்கு குறித்த சில்வா தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
