கல்கிசை நீதிமன்ற சம்பவம்: சமாதான தீர்வுக்கு எதிர்ப்பு
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் சட்டத்தரணியை தாக்கிய சம்பவ வழக்கில் சமாதான தீர்வுக்கு விருப்பமில்லை என சிரேஷ்ட வழக்கறிஞர் குணரத்ன வன்னி நாயக்க நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
அவரது சட்டக் குழு நேற்று (17.11.2025) நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
வழக்கு விசாரணை
ஆறு கூட்டு அறிக்கைகளுடன் மேலும் அறிக்கைகளை சமர்ப்பித்த கல்கிசை பொலிஸார், நவம்பர் 8ஆம் திகதி இரு தரப்பினரும் மத்தியஸ்த குழுவுக்கு அழைக்கப்பட்டதாகவும், ஆனால் வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க முன்னிலையாகவில்லை, பொலிஸ் கான்ஸ்டபிள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கான்ஸ்டபிளின் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட காணொளியும், சிறைச்சாலை பேருந்தின் 'DVR' காட்சிகள் அடங்கிய சிடியையும் அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்ப பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |