அரசியல் நலனுக்காக தமிழ் மக்களை அடகு வைக்கும் வட மாகாண ஆளுநர் : சட்டத்தரணி சுகாஷ்
சட்டவிரோத தையிட்டி விகாரையை வட மாகாண ஆளுநர் தனது அற்ப பதவிக்காக தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் அடகு வைக்க வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணிமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்று(12) வலி வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் பதவி
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வட மாகாண ஆளுநர் தனது பதவியை தக்க வைப்பதற்கும் எதிர்காலத்தில் பதவிகளை எதிர்பார்ப்பதற்கும் தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளார்.
அதேபோல் அரசியல் கோமாளி ஒருவரும் தையிட்டி விகாரையை அகற்றக்கூடாது என கூறி வருவது திட்டமிட்ட அரச முகவர்களாக இவர்கள் செயற்படுகிறார்கள்.
தையிட்டி சட்டவிரோத விகாரை போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை பார்த்திருப்பார்கள் மக்களின் உணர்வுகளை அறிந்திருப்பார்கள்.
தையிட்டி விகாரைக் காணி
தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தின் அனுசரணையுடன் கட்டப்பட்ட தையிட்டி விகாரைக் காணி மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
மக்கள் தமது கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள் மக்களின் காணிகள் மக்களுக்கே வேண்டும் மாற்றுக் காணிகளை ஏற்க மாட்டோம்.
ஆகவே சட்ட விரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் பதவிகளுக்காக தமிழ் மக்களை காட்டி கொடுப்பதை அரசின் முகவர்கள் நிறுத்த வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 3 நாட்கள் முன்
![பிரபல இயக்குனரை வீட்டிற்கு சென்று சந்தித்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி புகழ் விஷால்... யாரை பாருங்க](https://cdn.ibcstack.com/article/cb97d6f1-3bbb-4a1e-b07e-2da37a8e039c/25-67ac160a1010c-sm.webp)
பிரபல இயக்குனரை வீட்டிற்கு சென்று சந்தித்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி புகழ் விஷால்... யாரை பாருங்க Cineulagam
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)