விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட சட்டத்தரணி விடுதலை
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பெண் சட்டத்தரணியை விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி , அங்கு பணியாற்றும் பெண் சட்டத்தரணியொருவர் தனக்கு தலைசாய்த்து மரியாதை செலுத்தவில்லை என்ற காரணத்தினால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.
ரிட் மனு மீதான விசாரணை
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ராஜீவ் அமரசூரிய குறித்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இன்று(31) குறித்த ரிட் மனு மீதான விசாரணையின் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணியை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரம் புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதியின் முடிவு குறித்து சட்ட வல்லுநர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் பலர் நீதித்துறை அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் டிமாண்டி காலனி 3.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் Cineulagam
