படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி - தொடர்ந்து எழும் சர்ச்சைகள்
அண்மையில் கொழும்பு - அக்குரேகொடவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி இருவரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூடானது, கரந்தெனிய சுத்தா என்னும் பாதாள உலகக்குற்றவாளியால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
அதேநேரம், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று குறித்த பகுதி, உயர் பாதுகாப்பு வலயம் அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதற்கிடையில், இதற்கு முன்னர், நடந்த நீதித்துறைக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் வகையிலான குற்றச் சம்பவங்களின் போது, பணி நிறுத்தம் செய்யாத சட்டத்தரணிகள், தற்போது அவர்களில் ஒருவருக்கு பிரச்சினை என்ற போது மாத்திரம் இவ்வாறு செயற்படுவது சரியா என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இவற்றிற்கு விளக்கமளிக்கும் வகையில், லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளார் சட்டத்தரணி, ஜெயரட்ண ராஜா..
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan