பிரபல சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா காலமானார்
சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி. கௌரி சங்கரி தவராசா திடீர் உடல்நலக் குறைவால் இன்றையதினம் இயற்கை எய்தினார்.
இவர் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான K.V. தவராசாவின் மனைவியான இவர் குற்றவியல் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தார்.
நாட்டின் முக்கியமான வழக்குகளிலும், சர்வதேச அளவில் பேசப்படும் வழக்குகளில் கௌரி சங்கரி தவராசா முன்னிலையாகியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவால்மிக்க பல வழக்குகள் தொடர்பில் இவர் ஆஜரானதுடன் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இவர் அறியப்படுகின்றார்.
இவர் இறுதியாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு சார்பாக வழக்கில் வாதாடி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 35 ஆண்டுகளாகச் சட்டரீதியற்ற முறையில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், கோவில் தர்மகர்த்தாக்கள்,சுங்கத் திணைக்கள அதிகாரிகள் உட்பட இன மத பேதமின்றி முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 300க்கு மேற்பட்ட மனித உரிமை மீறல் மனுக்களையும் ஆட்கொணர்வு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எந்தவொரு நிலையிலும் அஞ்சந்துறந்து தைரியமாகக்களமாடியவர்.அடிப்படை உரிமை மனுக்கள் உட்பட பல்வேறு வகைப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் அதிக அக்கறைகொள்ளச் செய்தவர்.
ஆட்கொணர்வு மனுவின் மூலம் பல்வேறு வழக்குகளின் போக்கையே மாற்றி அமைத்திருந்ததுடன்,நாட்டில் பேசப்படுகின்ற முக்கிய சம்பங்கள் அனைத்திலும் அவரது தாக்கம் பெருமளவில் இருந்து வந்துள்ளது.
தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும், விடுதலைக்கும் நீதித்துறை சார்ந்த செயற்பாடுகளில் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் பங்களிப்பு மதிப்பீடு செய்யப்படும் போது மிகவும் கவனத்தோடு ஆராயப்படல் வேண்டும்.
ஏனெனில் அவர் தனது பணிகளை ஆற்றிவிட்டு எப்போதும் விளம்பரமில்லாமல் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தவர். மும்மொழிகளிலும் புலமை மிக்க ஆளுமையாக இவர் அனைத்து வழக்குகளிலும் ஒரு நட்சத்திரமாகவே ஜொலித்தார்.
இத்தகைய ஆற்றல் மிக்க மனிதத் தன்மையின் பேரூற்றான சிரேஸ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா இன்று எம்மைப் விட்டுப் பிரிந்து இறையடி சேர்ந்துவிட்டார் என்பது ஆற்றாத்துயர் தரும் நிகழ்வாகும். அவரது இழப்பு தமிழ் மக்களின் சட்டத்துறைச் செயற்பாடுகளில் ஈடு செய்ய முடியாத இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.
இனமத பேதங்களுக்கப்பால் மனிதத்தோடு அனைத்துச் செயற்பாடுகளிலும் ஈடுபாடு காட்டிய அன்னார் உடல்நலக் குறைபாடு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். அவரது ஆத்ம சாந்திக்காக உறவுகள் அனைவரும் பிரார்த்திப்பது மட்டுமே இப்போது முன்னுள்ள ஒற்றைத் தெரிவாகும்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
