அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கியுடன் சட்டத்தரணி கைது
அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி ஒன்றை வான் ஒன்றில் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் குற்ற விசாரணைப்பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தரணியை இன்று மாலை கைது செய்துள்ளனர்.
[I2YWGEஸ
குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், சட்டத்தரணி தனது வானில் சாலியவெவ கலவெவ பிரதேசத்திற்கு சென்றுக்கொண்டிருந்த போது, இடையில் நிறுத்தி சோதனையிட்ட போதே துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சட்டத்தரணி நாளைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




