புதிய கட்டத்தை நோக்கி இலங்கையின் கல்வித்துறை
குடிமை உணர்வு மற்றும் ஜனநாயக விழுமியங்களை வளர்ப்பதில் அரசாங்கத்தின் பங்கை வலியுறுத்தி, பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எழுதிய கடிதத்தில் அந்த சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
பாடசாலைகளில் சட்டம்
சட்டம் அல்லது அது தொடர்பான பாடத்தை ஆரம்பக் கல்வி நிலையில் கட்டாயமாக்கவும், உயர்தர வகுப்பில் ஒரு விருப்பப் பாடமாகவும் மாற்றவேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது.
பல நாடுகள் ஏற்கனவே பாடசாலைகளில் சட்டம் கற்பிக்கின்றன என்றும், இலங்கையின் சூழலுக்கு ஏற்ற பாடத்திட்டத்தை உருவாக்குவதில் கல்வி அமைச்சுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுர கல்ஹேன ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்




