இலங்கையில் கடுமையாகும் சட்டம் - உடன் கைது செய்யப் போவதாக எச்சரிக்கை
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களின் பின்னணியில் முப்படைகளை சேர்ந்த வீரர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அச்சுறுத்தலாக மாறியுள்ள பாதாள உலகத்துடன் தொடர்புடைய இராணுவம் மற்றும் பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குற்றச்செயல்களுடன் யாரேனும் அடையாளம் காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக நிறுவனச் சட்டங்கள் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
புலனாய்வு அறிக்கை
பாதாள உலகத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள் குறித்து விசேட புலனாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்கள் பாதாள உலக கும்பலுடன் நெருக்கிய தொடர்புகளை கொண்டுள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This..

SBI, HDFC வங்கி FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
