வெளிநாட்டிலிருந்து வந்த பெருந்தொகை பணத்தை அடிப்படைவாதத்தை பரப்புவதற்காக அமைப்பொன்றுக்கு வழங்கிய நபர்
போதைப்பொருள் குற்றச்சாட்டில் பேலியகொடை பொலிஸார் சந்தேகநபரொருவரை சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்திருந்தனர். பாணந்துறை - கெசல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நபருக்கு துபாய் நாட்டில் இருந்து பெருந்தொகை பணம் வந்துள்ளமையானது அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நபர் தனக்கு கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பரப்புவதற்காக அமைப்பொன்றுக்கு வழங்கியுள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தெரியவந்ததை அடுத்து சந்தேகநபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.