‘‘ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அச்சிடப்படும் பெருந்தொகை பணம்’’
ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்களை மூடுவதற்காக சம்பளத்திற்கு மேலதிகமாக மாதம் தலா மூன்று லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) தெரிவித்துள்ளார்.
இந்த பணம் சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்படுவதில்லை என்பதால், ஆளும் கட்சியின் சில பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த பணத்தை நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாகாண சபை உறுப்பினர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாவும், கிராம சேவகர் பிரிவுகளுக்கு தலா 30 லட்சம் ரூபாவும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா 10 கோடி ரூபாவையும் அரசாங்கம் வழங்கி வருகின்றது.
பணத்தை அச்சிட்டு இந்த பணத்தை அரசாங்கம் வழங்கி வருகின்றது எனவும் அபேசிங்க கூறியுள்ளார்.
இதனை தவிர கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டபிள் கெப் வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டு மக்கள் இன்னும் தம்மை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பிக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில், இவ்வாறு ஆளும் கட்சியின் பிரதிநிதிகளுக்கு பணத்தை வழங்குவதை வன்மையாக கண்டிப்பதாகவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
